பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து அமெரிக்க மருத்துவமனையில் 3 பெண் ஊழியர் சுட்டுக்கொலை: முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்

By செய்திப்பிரிவு

அமெரிக்காவில் உள்ள மனநல மருத்துவமனையில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய தாக்குதலில் அங்கு பணிபுரிந்த 3 பெண் ஊழியர்கள் பலியாயினர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோன்ட்வில்லி நகரில் ராணுவ வீரர்களுக்கான மனநல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு முன்னாள் ராணுவ வீரர் ஆல்பர் வாங் (36) என்பவர் சென்றுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில், தான் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அங்குள்ளவர்களை அவர் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தார்.

தகவலறிந்த பாதுகாப்புப் படையினர், மருத்துவமனையை சுற்றி வளைத்தனர். எனினும், மருத்துவமனை கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. நேற்று காலை 10.20 மணியளவில், மருத்துவமனைக்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து, மருத்துவமனை கதவுகளை உடைத்து பாதுகாப்புப் படையினர் உள்ளே சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி ஆல்பர்ட் வாங் துப்பாக்கியால் சுட்டார். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையின் முடிவில் ராபர்ட் வாங்கை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

அதன் பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மூன்று பெண் ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இதுகுறித்து கலிபோர்னியா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 min ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

40 mins ago

கல்வி

43 mins ago

விளையாட்டு

53 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்