ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தி அதிபரின் அண்ணன் கிம் ஜாங் நம் கொல்லப்பட்டார்: வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வட கொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் 2011-ம் ஆண்டு காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு, வட கொரியாவின் அதிபர் பதவிக்கு கிம் ஜாங் இல்லின் வாரிசுகளான கிம் ஜாங் நம்முக்கும், ஜிம் ஜாங் உன்னுக்கும் கடுமையான போட்டி நிலவியது. இதையடுத்து, ராணுவத்தின் உதவியுடன் அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, வட கொரியாவிலிருந்து கிம் ஜாங் நம் வெளியேறினார்.

இந்த சூழலில், கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜாங் நம் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி மர்மமாக இறந்து கிடந்தார்.

இந்நிலையில், கிம் ஜாங் நம்மினை ‘வி.எக்ஸ்’ ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தி வட கொரியா கொலை செய்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சர்வதேச விதிகளை மீறிய வட கொரியா மீது புதிய தடைகளை விதித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஹேதர் நவுரட் தெரிவித்தார். கிம் ஜாங் நம் கொலை குறித்து அமெரிக்க உளவுத்துறை சிஐஏ மேற்கொண்ட விசாரணையில், இந்தத் தகவல்கள் தெரியவந்திருப்பதாக ஹேதர் நவுரட் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

சினிமா

14 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

மேலும்