பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு

By செய்திப்பிரிவு

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார். அவருக்கு வயது 76. லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

அவரது மறைவு தங்களை பெருந்துயருக்கு ஆழ்த்தியுள்ளதாக அவரது பிள்ளைகள் லூஸி, ராபர்ட், டிம் ஆகியோர் கூறியிருக்கின்றனர். "எங்கள் அன்புத் தந்தை எங்களைவிட்டு பிரிந்தார். அவரது மறைவு எங்களை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.

அவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி, அசாதாரண மனிதர். அவரது பணிகளும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் மதிநுட்பமும் ஹாஸ்ய உணர்வும் உலகில் பலரை கட்டிவைத்திருக்கிறது.

"இந்த அண்டம் நீங்கள் விரும்பும் மனிதர்களின் வசிப்பிடமாக இல்லாவிட்டால் அர்த்தமற்றதாக இருந்திருக்கும்" என்று ஒரு முறை அவர் கூறியதை நாங்கள் இப்போது நினைவுகூர்கிறோம். அவரது இழப்பு எங்களை என்றென்றும் வாட்டும்" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருந்துளை (black holes) குறித்த ஆய்வில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஏ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம் (A Brief History of Time) உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார்.

தடைகளைத் தகர்த்தவர்..

21-வயதில் மிகக்கொடிய நரம்பியல் நோயால் (amyotrophic lateral sclerosis) பாதிக்கப்பட்டார் ஸ்டீபன் ஹாக்கிங். அப்போது மருத்துவர்கள், ஸ்டீபன் 2 அல்லது 3 வருடங்கள் மட்டுமே வாழ்வார் என்றனர். முதலில் நோயால் மன அழுத்தத்துக்கு உள்ளான ஹாக்கிங் பின்னர் அதை உடைத்தெரிந்தார். முனைவர் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கனித பேராசிரியர் ஆனார்.

வாய்ஸ் சின்த்தசைஸர் எனப்படும் பேச்சு உருவாக்கி மூலம் அவர் உலகம் முழுவதும் ஆற்றிய உரைகள் லட்சோபலட்ச மக்களை அவர்பால் ஈர்த்தது. எளிய மனிதர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது.

ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன், தி சிம்ப்சன்ஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவரை இன்னும் மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்த்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்