மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், வெளிநாடு செல்ல தடை: பாகிஸ்தான் அரசு உத்தரவு

By பிடிஐ

சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி, அவர் நாட்டை வெளிநாடு செல்லவும் தடை விதித்து பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

மசூத் அசார் தன்னுடைய ஆயுதங்களை விற்பனை செய்யவும், வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

காஷ்மீரில் புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே  ராணுவப் பதற்றம் அதிகரித்து, அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை தாக்கி இந்திய விமானப்படை அழித்தது.

இதைத் தொடர்ந்து ஐ.நா.வில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. கடந்த 4 முறை இந்தியா கொண்டு வந்த தீர்மானம் அனைத்தையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் முட்டக்கட்டை போட்டது. ஆனால், இந்த முறை சம்மதத்தித்தால், மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பால் எந்த ஒருநாட்டுக்கும் மசூத் அசார் தப்பிச் செல்லா முடியாத வகையில் தடைகொண்டுவரப்பட்டது, சர்வதேச அளவில் பல நாடுகளில் இருக்கும் மசூத் அசாரின் சொத்துக்கள், வங்கிக்கணக்குகள் அனைத்தும் முடக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருக்கும் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கியும், அவர் வெளிநாடு செல்ல தடைவிதித்தும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானம்(2368) உடனடியாக மசூத் அசாருக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவரின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுகிறது, அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. மசூத் அசார் தனது ஆயுதங்களை விற்பனை செய்யவும், யாரும், எந்த நிறுவனமும் மசூத் அசாருக்கு ஆயுதங்கள், தளவாடங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்