பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்கிறது ஸ்காட்லாந்து

By செய்திப்பிரிவு

பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்த ஸ்காட்லாந்து அதில் இருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளது. இது பிரிட்டனில் உள்ள பிற நாடுகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்திய பிறகு ஸ்காட்லாந்து அடுத்த வாரம் தனது சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்த பகுதியே கிரேட் பிரிட்டன் அல்லது பிரிட்டன் என்று அழைக்கப்படுகிறது.

பிரிட்டனுடன் வடக்கு அயர்லாந்து இணைந்த பகுதி “யுனைட்டட் கிங்டம்” ஆகும்.

இப்போது பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதால் ஸ்காட்லாந்து பொருள்களுக்கு பிரிட்டனின் பிற நாடுகள் இனி இறக்குமதி வரி செலுத்த வேண்டும். பிரிட்டன் ஸ்காட்லாந்து இடையே வங்கி பணப் பரிமாற்றம், ரொக்கப் பரிமாற்றம் ஆகியவையும் சிக்கலாகும்.

ஸ்காட்லாந்து மக்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் பிரிட்டனிடம் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து செல்ல முடிவெடுத்தது. ஸ்காட்லாந்து பிரிந்து செல்வது பிரிட்டன் விரும்பவில்லை. ஸ்காட்லாந்து பிரிந்து போகாமல் இருந்தால் அதற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என்று பிரிட்டன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து பிரிந்து செல்வது குறித்து பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத் கவலை அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான செய்திகளை அவர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்