துப்பாக்கி உரிமம் சட்டத்தில் மாற்றம்: நியூஸி. அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று கிறைஸ்ட் சர்ச்சிலுள்ள கான்டர் பர்ரியில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகளை நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: ஆஸ்திரே லியாவைச் சேர்ந்த தீவிரவாதி பிரெண்டன் டாரண்ட், கடந்த 2017-ல் ஏ பிரிவைச் சேர்ந்த துப் பாக்கி உரிமத்தைப் பெற்றுள் ளார். இதன்மூலம் அவர் 5 துப் பாக்கிகளை வாங்கியுள் ளார். அதைக் கொண்டுதான் அவர் கிறைஸ்ட்சர்ச் நகரில் துப்பாக்கிச்சூட்டை நடத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து துப்பாக்கி உரிமம் பெறுவதில் உள்ள சட்டங் களை கடுமையாக்க முடிவு செய்துள்ளோம். சட்டங்களை மாற்றுவது தொடர்பான ஆலோ சனையில் அதிகாரிகள் ஈடுபட் டுள்ளனர். விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வரும் என்பதை நான் உறுதி செய்கிறேன்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைதான 3 பேரும், புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பில் சிக்கவில்லை. அவர்கள் மூவ ரும் ஆஸ்திரேலியாவிலும் கண்காணிப்பில் இல்லை. உலகெங்கும் தீவிரவாதத்துக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. தீவிரவாதத்தை முழுமையாக எதிர்ப்போம்.

நமது நாட்டின் புலனாய் வுத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக தீவிரமான ஆலோ சனையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

16 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்