சவுதி இளவரசரை சந்திக்கும் தலிபான்கள்

By செய்திப்பிரிவு

சவுதி இளவரசரை தலிபான்கள் பாகிஸ்தானில் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வரவிருக்கிறார். சவுதி இளவரசரின் இந்த பாகிஸ்தான் பயணத்தில் 10 -15 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக உடன்படிக்கைகள்  ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தலிபான்கள் சவுதி இளவரசரைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதில் இந்தச் சந்திப்பு முக்கியத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனை பாகிஸ்தானின் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2001-ல் ஆப்கானில் அமெரிக்கப் படையெடுப்புக்குப் பிறகு  ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேற வேண்டும் என்று  தலிபான்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராகத் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சவுதி இளவரசருடனான தலிபான்களின் இந்தச் சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

33 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்