தன்பாலின திருமணத்தை அனுமதிக்கக் கோரி ஜப்பானில் போராட்டம்

By செய்திப்பிரிவு

தங்களின் திருமணத்தை அரசு அனுமதிக்கவேண்டும் என்றுகோரி ஆண் தன்பாலின உறவாளர்கள் ஜப்பானில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

 

'அனைத்து ஜப்பானியர்களுக்கும் திருமணம்' என்று எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்திய 6 தம்பதியினர், டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதேபோல ஒசாகாவில் இருந்து 3 தம்பதிகளும் நகோயாவில் இருந்து ஒரு தம்பதி மற்றும் சப்போரோ பகுதியில் இருந்து 3 தம்பதிகளும் வழக்கு தொடர்ந்தனர்.

 

கென்சி ஐபா என்பவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஜப்பானில் உள்ள அனைத்து பாலியல் சிறுபான்மையினருடனும் இணைந்து இந்த போரில் ஈடுபடுவேன்.

 

கொசுமி என்னும் ஆண் நண்பரை 2013-ல் மணந்துகொண்டேன். எங்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க ஜப்பான் அனுமதி அளிக்க வேண்டும். எங்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. நாங்கள் நிஜத்தில் தம்பதியாக வாழ்ந்தாலும் சட்டப்படி நண்பர்களாகவே இருக்கிறோம். அதனால் காத்திருப்பதைவிட செயலாற்ற முடிவு செய்துவிட்டோம்'' என்றார். 

 

இதுகுறித்துக் கடந்த ஆண்டு பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ''தன்பாலினத் திருமணத்தை அனுமதிப்பது குறித்து ஒற்றை நாளில் முடிவு செய்துவிட முடியாது. அச்செயல் ஜப்பானியக் குடும்பக் கட்டமைப்பை எப்படி பாதிக்கும் என்பது தெரியவில்லை. இதனால் இந்த விவகாரத்தைத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறோம்'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

எனினுல் ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சி, எல்ஜிபிடி மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இதுவரை காண்பிக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 secs ago

சினிமா

6 mins ago

ஓடிடி களம்

38 mins ago

கல்வி

52 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்