மெக்ஸிகோவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கம்

By செய்திப்பிரிவு

மெக்ஸிகோவில் கடந்த 9 வருடங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெக்ஸிகோவில் தேவலாயம் ஒன்றின் பேராயர் ஒருவர் கூறும்போது, ''கடந்த ஒன்பது வருடங்களில் மட்டும் 152 கத்தோலிக்க பாதிரியார்கள் சிறார்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக தேவாலயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிறை தண்டனை பெற்றுள்ளனர்" என்றார் .

பிரேசிலுக்கு அடுத்து அதிகம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகமாக இருப்பது மெக்ஸிகோவில்தான்.

முன்னதாக, சில பாதிரியார்களும் பிஷப்புகளும் பாலியல் பலாத்காரச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

2018-ல், கேரள கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் தன்னை[ பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதை அடுத்து, இந்தப் பிரச்சினை பெரிதானது.

இதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபடும் பாதிரியார்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உலக அளவில் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

39 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்