சவுதியிடம் வெளிப்படை தன்மை இல்லை: துருக்கி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட விவகாரத்தில் சவுதி நடத்தும் விசாரணையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று துருக்கி குற்றச்சாட்டியுள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் சவுதியின் விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஜமால் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்து அவரது படுகொலைக்கு சவுதி  நியாயம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டது தொடர்பாக  விசாரணை  நடத்திய ஐக்கிய நாடுகள் சபை தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், ''சவுதி அரேபியாவின் அதிகாரிகள் திட்டமிட்டு மிருகத்தனமாக ஜமாலைக் கொலை செய்துள்ளனர். மேலும் சவுதி, துருக்கி அரசு இந்தக் கொலை குற்றத்தை விசாரிக்க அனுமதி அளிக்காமல் 13  நாட்கள் தாமதப்படுத்தியுள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

10 mins ago

விளையாட்டு

26 mins ago

வாழ்வியல்

35 mins ago

ஓடிடி களம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்