இங்கிலாந்து இளவரசர்களுக்கு இடையே பிரிவு: மனைவிகளுக்குள் ஒத்துப்போகாததுதான் காரணமா?

By செய்திப்பிரிவு

இங்கிலாந்து இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹாரி இருவரும் தங்களின் அரண்மனையில் இருந்து சில நாட்களில் பிரிந்துசெல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இங்கிலாந்தின் கென்சிங்டன் அரண்மனையில் இரண்டு தம்பதிகளும் ஒன்றாக வசித்துவருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே, இரண்டு சகோதர்களுக்கும் இடையே பிரிவுக்கான ஆயத்தங்கள் நடைபெற்று வருவதாகத் தகவல் கசிந்தது. இதன்மூலம் தங்களுக்கான பொறுப்புகளை பரஸ்பரம் அதிகரித்துக்கொள்ள முடியும் என இருவரும் நம்புவதாகக் கூறப்பட்டது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ஒரு சில நாட்களுக்குள்ளாக இரு இளவரசர்களும் தனித்தனியாகச் செல்வது உறுதி என்று தெரிவித்துள்ளன. ஆனால் இவர்களின் பிரிவுக்குக் காரணம் மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபமே காரணம் என்று கூறப்படுகிறது.

 

முதலில் இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்தனர். அதையத்து ஹாரி - மேகன் இருவரின் திருமணமும் நடந்தது. நால்வரும் ஒரே அரண்மனையில் வசித்த நிலையில், இரண்டு இளவரசர்களின் மனைவிகளுக்கிடையே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்தன.  தற்போது மேகன் கர்ப்பமாக உள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேற ஹாரி திட்டமிட்டுள்ளார்.

 

ஆனால் இதுகுறித்து கென்சிங்டன் அரண்மனை வட்டாரம் பதிலளிக்கவில்லை. எனினும் கடந்த நவம்பர் மாதத்தில் இளவரசர் ஹாரியும், மேகனும் நாட்டிங்காம் அரண்மனைக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக அரண்மனை அறிவித்திருந்தது.

 

எனினும் அரண்மனை நிர்வாகத்தையும் அறக்கட்டளையின் பணிகளையும் இளவரசர்கள் ஒன்றாகவே கவனித்துக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது இரண்டு தம்பதியினரும் ஒன்றாக அரண்மனையில் பொதுமக்களைச் சந்தித்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்