தப்பி வந்த சவுதி பெண்ணுக்கு அடைக்கலம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு?

By செய்திப்பிரிவு

சவுதியிலிருந்து தப்பிவந்த இளம் பெண் ரஹாப் மொகமது அல் குனான்க்கு அடைகலம் அளிப்பது குறித்து ஆஸ்திரேலியா ஆலோசித்து வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் கூறும்போது,  ‘‘அவர் ஆஸ்திரேலியாவுக்கு அடைகலம் வர வேண்டும் என்று உறுதியாக நினைத்தால், இதுகுறித்து நாங்கள் அவசரமாக ஆலோசிப்போம். அவருக்கு வழங்கப்பட உள்ள விசா குறித்து ஆலோசிப்போம். இதுகுறித்து குடியுரிமை அமைச்சர் டேவிட்டிடமும் பேசி இருக்கிறேன் ” என்று தெரிவித்தார்.

யார் இந்த ரஹாப் மொகமது அல் குனான்?

ரஹாஃப் மொகமது அல் குனான் (18) குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்து இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் பிடுங்கிக் கொண்டனர்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை குனான்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ''குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர்.  இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன். தாய்லாந்து  காவல்துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு இறைஞ்சிக் கேட்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

இதனை ஏஎஃப்பி செய்தி நிறுவனமும்  உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின்  தந்தை அப்பெண்ணை திரும்ப அனுப்பி வைக்கும்படி கூறியிருந்த நிலையில்  இந்த விவகாரத்தில்”புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது” ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

12 mins ago

விளையாட்டு

53 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்