4-வது முறையாக பிரதமராக பதவியேற்றார் ஷேக் ஹசினா

By செய்திப்பிரிவு

வங்கதேச அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசினா (71)  4-வது முறையாக அந்நாட்டுப் பிரதமராக பதவியேற்றார்.

வங்கதேச அதிபர் அப்துல் ஹமித் பதவியேற்பு பிரமாணம் செய்து வைக்க ஷேக் ஹசினா திங்கட்கிழமை அதிபர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். ஹசினாவுடன் 42 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

வங்க தேசத்தில் மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து  உடனடியாக வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியாகினர்.

போட்டியிட்ட 299 தொகுதிகளில் 288-ல் அவாமி லீக் கட்சி வென்றிருப்பது அக்கட்சியின் ஆதரவாளர்களையே மலைக்க வைத்தது. இந்த வெற்றி மூலம் ஷேக் ஹசினா நான்காவது முறையாக வங்கதேசப்  பிரதமராக வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெறும் 6 இடங்களையே கைப்பற்றின.

இந்தத் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் மீண்டும் முறையாக தேர்தல் நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 mins ago

ஜோதிடம்

25 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்