தாய்லாந்தை அச்சுறுத்தும் ‘பபுக்’ புயல்; இன்று கரையை கடக்கிறது: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்

By ஐஏஎன்எஸ்

தெற்கு தாய்லாந்து பகுதியில் புயல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் தெற்கு கடல்பகுதியில் புயல் நிலைகொண்டுள்ளது. பபுக் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், 75 கி.மீ  முதல் 95 கி.மீ. வேகத்துடன் இன்று மதியம் கரையைக் கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அச்சமயம் அதிக மழைப்பொழிவினால் தெற்கு தாய்லாந்து கடற்கரையோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுத்தும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நகோன் சி தாமராத் மாகாணத்தில் 80 ஆயிரம் மக்களை வெளியேற்ற அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்சமயம் 8 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, சாமுய், தாவோ மற்றும் பாங்கான் ஆகிய தீவுகளுக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும் பாங்காங் விமானப் போக்குவரத்துத் துறை சாமுய் ஏர்போர்ட்டிலிருந்து விமானங்கள் புறப்படவும் அனுமதிக்கவும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. மீன்பிடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

20 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்