அண்டார்டிகாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7. 1ஆக பதிவு

By செய்திப்பிரிவு

வட அண்டார்டிகாவில் உள்ள சாண்ட்விட்ஜ்  தீவுக்கு அருகே  இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7. 1 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட தகவலில்,  ”அண்டார்டிகாவில் அமைந்துள்ள பிரிட்டன் கட்டுப்பாட்டின் கீழ்  உள்ள சாண்ட்விட்ஜ் தீவுக்கு அருகில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம்  ஏற்பட்டது.  நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7. 1ஆகப் பதிவாகியது. இந்த  நிலநடுக்கம் நிலத்துக்கடியில்  176 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி  எச்சரிக்கை ஏதும் இதுவரை விடுக்கப்படவில்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்