ஷெரீப் பதவி விலக பாக். மதத் தலைவர் 24 மணி நேரம் கெடு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி, ஷெரீப் பதவி விலக 24 மணி நேர கெடு விதித்துள்ளார்.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிரான போராட்டத்தால் அரசியல் சிக்கல் முற்றி வரும் நிலையில் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் சமரச முயற்சியில் இறங்கியுள்ளார்.

சமரச முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், மதத் தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோரிடம் பேச்சு நடத்தியுள்ள ரஹீல் ஷெரீப், அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு தாஹிர் உல் காத்ரியை சந்தித்துள்ளார் இம்ரான் கான் கட்சியின் துணைத் தலைவர் ஷா முகமது குரேஷி.

இரு தரப்புக்கும் இடையேயான முதல் நேரடி பேச்சுவார்த்தை இதுவாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்கு பிறகு, ஷெரீப் பதவி விலக தாஹிர் உல் காத்ரி 24 மணி நேர கெடு விதித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்