சீனா - ஹாங்காங்கை இணைக்கும் உலகின் மிகநீண்ட கடல்பாலம் நாளை திறப்பு

By ஐஏஎன்எஸ்

சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் 56 கி.மீ. தொலைவு நீளமுள்ள உலகின் மிக நீண்ட கடல் பாலம் நாளை திறக்கப்படுகிறது

ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு கடல் மார்க்கத்தில் செல்லக்கூடிய உலகின் மிக நீண்ட பாலத்தின் கட்டுமானப் பணி தொடங்கி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அதற்கான பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இப்பாலத்தின் திறப்பு விழாவுக்காக சீனாவில் உள்ள சூஹாய் நகரம் தயாராகி வருகிறது.

இதுகுறித்து இன்று சிஎன்என் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:

நாளை (செவ்வாக்கிழமை) நடைபெறும் உலகின் நீண்ட கடல் பாலத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள சூஹாய் நகரத்தில் நடக்கும் விழாவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்  வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஹாங்காங்கிலிருந்தும் மகாவுலிருந்தும் உயரதிகாரிள் பலரும் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை முதல் பொதுப் போக்குவரத்துக்காக இப்பாலம் திறந்துவிடப்படும்.

இப்பாலம் கடந்த 2016 ஆம் ஆண்டே திறக்கப்பட இருந்தது, ஆனால் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் பாலத் திறப்பு தள்ளிப்போடப்பட்டது. தெற்கு சீனா முழுவதும் 56,500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீனா திட்டத்தின் முக்கிய ஒரு அங்கமே இது. இது ஹாங்காங் மற்றும் மக்காவு போன்ற 11 நகரங்களை உள்ளடக்கியுள்ளது, 68 மில்லியன் மக்களை இப்பாலம் இணைக்கிறது.

இப்பாலம் திறக்கப்பட்டவுடன் சீனா - ஹாங்காங்   இடையேயான பயண நேரம் மூன்று மணியிலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும். பயணிகளும் சுற்றுலா பயணிகளும் மிக எளிதாக இப்பகுதிகளை சென்றடைய பாலம் வழிவகுக்கும் என்று இப்பாலத்த்திற்காக திட்டமிட்டவர்கள் தெரிவித்தனர்.

கார் உரிமையாளர்கள் உட்பட யாராக இருந்தாலும் அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதனையடுத்து. தங்கள் வாகனங்களை ஹாங்காங் துறைமுகத்தில் நிறுத்திவிட்டு இதற்கு என்று அனுமதிக்கப்பட்டுள்ள சிறப்பு வாடகை கார்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.

கார் அதிக செலவு என்று நினைப்பவர்கள் விரைவுப் பேருந்தை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பேருந்தில் செல்ல 8 லிருந்து 10 டாலர் வரை கட்டணம் செலுத்தவேண்டும். பகலில் செல்லும் நேரத்தைப் பொறுத்து இக்கட்டணம் மாறுபடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்