ஐ.நா.வால் சட்டப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க முடியவில்லை: இந்திய பிரதிநிதி பகிரங்க குற்றச்சாட்டு

By பிடிஐ

‘‘சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப் பதற்கு, சட்டப்பூர்வமாக தீர் மானத்தை நிறைவேற்ற ஐ.நா.வால் முடியவில்லை’’ என்று இந்திய பிரதிநிதி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில், ‘சர்வதேச தீவிர வாதத்தை ஒழிப்பதற்கான சட்டப் பூர்வ நடவடிக்கைகள்’ விவகாரங் களைக் கவனித்து வரும் 6-வது கமிட்டி கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய முதன்மை செயலர் மற்றும் சட்ட ஆலோசகர் எட்லா உமா சங்கர் பேசியதாவது:

தெற்காசியா முழுவதும் அல் கய்தா, தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்பு களால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத அமைப்புகளுக்குள் அதிகரித்து வரும் தொடர்புகள், எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல்கள், தீவிரவாத கொள்கை களைப் பரப்புதல், நவீன தொழில் நுட்பங்களை நாசவேலைகளுக்குப் பயன்படுத்துதல் போன்றவை அதிகரித்து வருகின்றன.

தீவிரவாத அமைப்புகளுக்கு சில நாடுகள் (பாகிஸ்தான்) ஆதரவும் நிதியுதவியும் அளித்து வருகின்றன. தீவிரவாதம் சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். எனவே, தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும்.

சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும். அப்போதுதான் தீவிர வாதத்துக்கு எதிரான நடவடிக்கை களை பலமாக செயல்படுத்த முடியும். தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கு தஞ்சமளித்து ஆதரவளிப்பவர்களுக்கும் உள்ள தொடர்புகளைப் பகிரங்கப்படுத்த சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். இதுகுறித்து ஒன்றாக கூட்டம் நடத்தி விவாதித்து சட்டரீதியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தீவிரவாதிகளுக்கு செல்லும் நிதி, அவர்களுக்கு தஞ்சம் அளிப் பவர்கள், உதவி செய்பவர்கள் என ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் அழிக்க வேண்டும். ஆனால் அதற் கான சட்டப்பூர்வ தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற ஐ.நா.வால் முடியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக சர்வ தேச தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை கள் குறித்து ஐ.நா. சபையில் பல முறை விவாதங்கள் நடைபெற் றுள்ளன. ஆனால், மிகப்பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட வில்லை. ஐ.நா.வின் பொருளாதா தடை கமிட்டியின் செயல்பாடுகள், முடிவுகள் எதிர்பார்க்கும் பலனை கொண்டுவரவில்லை.

இவ்வாறு எட்லா உமாசங்கர் பேசினார்.

பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத் தலைவர் அசார் மசூத்தை சர்வ தேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதை சீனா தடுத்து வருகிறது.

இதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய எட்லா உமாசங்கர், ‘‘தீவிர வாதத்தின் தீவிரத்தை உறுப்பு நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டரீதியிலான தீர்மானத்தை விரைவில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டியது மிகவும் முக்கியம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்