ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 12 போலீஸார் பலி

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 15 போலீஸார் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஜவ்ஸ்ஜன் மாகாணத் தலைமைக் காவலர்  முகமத் கூறும்போது, "ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியிலுள்ள ஜவ்ஸ்ஜன் மாகாணத்திலுள்ள குஷ் மாவட்டத்தில் இன்று (செவாய்க்கிழமை) தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் 12 போலீஸார் கொல்லப்பட்டனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றும் முயற்சி தகர்க்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் தலிபான்கள் மீது நடத்திய பதில் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்” என்றார்.

திங்கட்கிழமையன்று காசி மாகாணத்தில் தென் பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்