நீங்கள் இனப்படுகொலைக்கு கூட்டாளியாக இருந்தால் வரவேற்கப்படமாட்டீர்கள்- சூச்சியின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்த கனடா விமர்சனம்

By செய்திப்பிரிவு

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தது ஒரு இனப்படுகொலை நாம் அதை அவ்வாறுதான் கூற வேண்டும் என்று சூச்சிக்கு கவுரவ குடியுரிமையை ரத்து செய்த கனடா தெரிவித்துள்ளது.

ரோஹிங்கியா விவகாரத்தை சூச்சி கையாண்ட விதத்தை விமர்சித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கனடாவின் கவுரவ குடியுரிமைப் பதவிக்குத் தகுதியானவரா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், கனடா நாடாளுமன்றத்தில் ரோஹிங்கியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தடுக்கத் தவறியதன் காரணமாக சூச்சிக்கு வழங்கப்பட்ட கவுர குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெறக் கூறிய தீர்மானத்தில் ஒரு மனதாக வாக்களிப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் சூச்சிக்கு வழங்கிய கவுரவ குடியுரிமையை திரும்ப பெறுவதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூச்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக அறிவித்த செனட்டர் ரத்னா இதுகுறித்து கூறும்போது, “  நாம் அங்கு நடந்த அட்டூழியங்கள் என்ன என்பதை உணர வேண்டும். இது ஒரு இனப்படுகொலை நாம் அதை அவ்வாறே அழைக்க வேண்டும்.  இந்த உலகம் சூச்சியிடம் மியான்மரில் ஜனநாயகம் மற்றும் அமைதிகான நம்பிக்கையை எதிர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை.

உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு ஒரு அறிகுறியை நாங்கள் அனுப்புகிறோம். நீங்கள் இனப்படுகொலைக்கு கூட்டாளியாக இருந்தல் நிச்சயம் கனடாவால் வரவேற்கப்படமாட்டீர்கள்” என்று கூறினார்

2007-ம் ஆண்டு கனடா அரசின் கவுரவ குடியுரிமைப் பட்டம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது. கனடா அரசு வெகு சிலருக்கு மட்டுமே இப்பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். நீண்டகாலமாக வசித்து வரும் இவர்களுக்கு குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. அங்கு முஸ்லிம்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதல் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சகட்டத்தை எட்டியது. முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவர்களது வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும் நடந்தன. இதில் அந்நாட்டு ராணுவமும் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்புத் தாக்குதலில் ஈடுபட்டது.

இதனால், அங்கிருந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் பக்கத்து நாடான வங்கதேசத்தில் அகதிகளாகக் குடியேறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்