தாய்லாந்தில் பண மோசடி வழக்கு: புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறை

By ஏஎஃப்பி

தாய்லாந்தில் பண மோசடியில் ஈடுபட்ட புத்தத் துறவி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 114 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங் காக்கைச் சேர்ந்தவர் விராபன் சுக்பான் (39). புத்த மதத் துறவி யான இவர், அப்பகுதியில் மரகதக் கற்களுடன் கூடிய மிகப்பெரிய புத்தர் சிலையை கட்டி வருவதா கவும், அதற்காக தனக்கு நிதியுதவி அளிக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார். இதனை நம்பி, தாய்லாந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்கள், அவருக்கு ஏராள மான நிதியை வழங்கினார்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற கோடிக்கணக்கிலான பணத்துடன், விராபன் சுக்பான், கடந்த 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பினார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து போலீ ஸாரிடம் ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தனர். பின்னர், தாய்லாந்து அரசு எடுத்த முயற்சி கள் காரணமாக, அமெரிக்காவிட மிருந்து சில நாட்களுக்கு முன்பு விராபன் சுக்பான் நாடு கடத்தப் பட்டார்.

இந்த வழக்கானது, பாங்காக் பெருநகர நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 114 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாய்லாந்தில் பிரதமர் பிரயுத் சான் ஓ சா தலைமையிலான ராணுவ ஆட்சி அமைந்தது முதலாக, தவறு செய்யும் புத்த துறவி களுக்கு மிகக் கடுமையான தண் டனைகள் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்