பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான் கான் கட்சிக்கு 33 நியமன இடங்கள் ஒதுக்கீடு

By பிடிஐ

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைப்பதற்கு 172 உறுப் பினர்கள் ஆதரவு தேவை. இதில் 272 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படு கின்றனர். மீதம் உள்ள 70 பேர் கட்சிகள் பெற்ற வெற்றியின் அடிப்படையில் நியமிக்கப்படுவர். இதில் 60 இடங்கள் பெண்களுக் கும் 10 இடங்கள் சிறுபான்மை யினருக்காகவும் (முஸ்லிம் அல்லாத) ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25-ம் தேதி 272 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சி அமைக்க உள்ளார். வரும் 18-ம் தேதி புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நியமன இடங் களை அனைத்து கட்சிகளுக்கும் ஒதுக்கி உள்ளது. இதன்படி, பிடிஐ கட்சிக்கு 28 பெண்கள் மற்றும் 5 சிறுபான்மையின உறுப்பினர்கள் என 33 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அக்கட்சியின் பலம் 158 ஆக அதிகரித்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 14 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

எனினும், இம்ரான் கான் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 4 இடங்களில் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் பலம் 15 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 82 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) பலம் 11 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 53 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் தேர்தலுக்குப் பிறகு அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று முதல்முறையாக கூடுகிறது.

காலை 10 மணிக்கு அவை கூடியதும் முந்தைய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து, புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதையடுத்து புதிய சபாநாகருக்கு அயாஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்து புதிய அவையின் பணிகளை ஒப்படைப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்