இராக்கில் ஐ.நா. மனிதாபிமான உதவி

By செய்திப்பிரிவு

ஐ.நா.வின் அகதிகள் உதவி ஆணையம் இராக்கில் மிகப்பெரிய அளவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் சுமார் 5 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் பலர் குடிநீர், போதிய உணவு, மருந்துகள் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் தரை, கடல் மற்றும் வான் வழியாக ஐ.நா. அகதிகள் உதவி ஆணையம் நிவாரணப் பொருள்களை பெருமளவில் அனுப்பத் தொடங்கியுள்ளது.

ஜோர்டானில் இருந்து எர்பில் பகுதிக்கு விமானம் மூலமாகவும், துருக்கியில் இருந்து தரை வழியாகவும், துபையில் இருந்து கப்பல் மூலமும் இந்த நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. சவுதி அரேபியா, அமெரிக்கா, இங்கிலாந்து, லண்டன், குவைத், டென்மார்க், லக்ஸம்பர்க், நார்வே, ஸ்வீடன், தனியார் நிறுவனமான ஐகேஇஏ ஆகியவை இந்த நிவாரணப் பொருள்களுக்கான நிதியை பெருமளவில் அளித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 secs ago

இந்தியா

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்