கிரிக்கெட்டிலும் ‘டக்அவுட்’;ஆட்சியிலும் ‘அவுட்’: பாக்.முன்னாள் பிரதமர் குறித்த சுவாரஸ்யம்

By செய்திப்பிரிவு

கிரிக்கெட்டிலும் டக் அவுட், அரசியல் வாழ்க்கையிலும் அவுட்க ஆகி இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் குறித்து அறிவோம்.

ஆம், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் ஆட்சியை இழந்து சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பனாமா பேப்பர் வெளியிட்ட ஊழல் குறித்த விவகாரத்தில் பிரதமர் பதவியை உச்ச நீதிமன்ற உத்தரவின் பெயரில் நவாஸ் ஷெரீப் இழந்தார். பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியுற்று ஆட்சியையும் இப்போது இழந்துவிட்டார்.

நவாஸ் ஷெரீப் கடந்த 1990 முதல் 1993 வரையிலும், 1997 முதல் 1999 வரையிலும் பிரதமராகவும், 2013 முதல் 2017 வரையிலும் பிரதமராகவும் இருந்தார்.

நவாஸ் ஷெரீப் தனது இளமைக் காலத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகவே வலம் வந்தார். சர்வதேச போட்டிகளில் விளையாடாத நவாஸ் ஷெரீப் உள்ளூர் போட்டிகளில் ஏராளமாக விளையாடியுள்ளார். ஆனால், முதல் தரப்போட்டியில் ஒரே ஓரு ஆட்டத்தில்விளையாடி அதில் டக்அவுட் ஆகினார். அதன்பின் கிரிக்கெட் போட்டியில் நவாஸ் பங்கேற்கவில்லை.

கடந்த 1973-ம் ஆண்டு, டிசம்பர் 10-ம் தேதி, கராச்சி ஜிம்கானா மைதானத்தில் ரயில்வேஸ் அணிக்கும், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அணிக்கும் இடையே கிரிக்கெட் போ்ட்டி நடந்தது.

இதில் ரயில்வேஸ் அணிக்காக நவாஸ் ஷெரீப் விளையாடினார். தொடக்க வீரராக ஜாகீர் பட்டும், நவாஸ் ஷெரீப்பும் களமிறங்கினார்கள். ஆனால், பரிதாபம் என்னவென்றால், நவாஸ் ஷெரீப் தான் சந்தித்த முதல் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார்.

இந்தப் போட்டியில் நவாஸ் ஷெரீப் சார்ந்திருந்த ரயில்வேஸ் அணி 238 ரன்கள் குவித்தது. 239ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடிய ஏர்லைன்ஸ் அணி 119 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

ஆனால், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் கிரிக்கெட்டிலும் வெற்றி பெற்று நாட்டுக்கு முதல் முறையாக 1992-ம் ஆண்டு உலகக்கோப்பையை பாகிஸ்தானுக்கு பெற்றுக்கொடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும் 118 இடங்கள் பெற்ற இம்ரான் கான் அடுத்த பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

இம்ரான் கான் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,807 ரன்கள் குவித்துள்ளார். 175 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,709 ரன்கள் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 362 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 162 விக்கெட்டுகளையும் இம்ரான்கான் வீழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

இந்தியா

6 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்