‘‘உங்களை வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பேன்’’- குகையில் சிக்கிக் கொண்ட சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு சென்ற வீரரின் உருக்கமான இறுதி பேச்சு

By செய்திப்பிரிவு

குகையில் சிக்கியுள்ள அந்த குழந்தைகளை மீட்டு வீட்டுக்குக் கொண்டு வருவோம் என்று உயிரிழந்த கடற்படை வீரர் சமான் குனான் பேசிய கடைசி வீடியோ வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீர்ர்  சமான் குனான் உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் இறுதியாகப் பேசிய வீடியோ காட்சியை கார்டியன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் சமான் குனான் கூறுகையில் ‘‘நான் மருத்துவர்கள் மற்றும் கடற்படை வீரர்களுடன்  வந்துக் கொண்டிருக்கிறேன். பல உபகரணங்கள் எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. உங்களை மாலை சந்திக்கிறேன்.  நாங்கள் குழந்தைகளை வீட்டுக்குக் கொண்டு வருவேன்’’ என கூறுகிறார்.

சமான் குனானின் மரணம் குறித்து கடற்படை தலைவர் அர்பாகோர்ன் கூறும்போது, "அவர் ஆக்ஜிஜன் டேங்கை பொருத்தும்போது சுய நினைவை இழந்துவிட்டர். அவரது நண்பர் அவருக்கு முதலுதவி அளித்தும் அவர் நினைவு திரும்பவில்லை. அவர் தொடர்ந்து நினைவு இழந்து இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.  நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். நாங்கள் யாரும் பயப்படவில்லை.  நாங்கள் எங்கள் திட்டத்தை  நிறுத்த போவதில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, தாய்லாந்தில்  தாம் லுவாங் குகையில்  10 நாட்களுக்கும் மேலாக சிக்கிக் கொண்டுள்ள சிறுவர்கள் சுவாசிப்பதற்காக ஏர் டேங்குகளை (சுவாசிப்பதற்கு தேவையான காற்று அடங்கிய சிறிய தொட்டிகள்) பொருந்தும் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த சமான் குனான் உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

48 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

53 mins ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்