வடகொரியா செல்லும் சிரியா அதிபர் ஆசாத்

By செய்திப்பிரிவு

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்  தங்கள் நாட்டுக்கு வருகை தர  இருப்பதாக  வடகொரியா தெரிவித்துள்ளது.

இதனை வடகொரிய அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. ஆனால் பாஷார் அல் அசாத் - கிம் ஜோங் உன்  இடையேயான சந்திப்பு எப்போது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

இந்தச் சந்திப்பு குறித்து, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத், "நான் வடகொரியாவுக்கு செல்ல இருக்கிறேன். அந்நாட்டு அதிபர் கிம்முடன் எனது சந்திப்பு நடைபெறுகிறது.

சமீபத்தில் கொரிய தீபகற்பத்தில்  குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் உலகின் சிறந்த அரசியல் திறமைமிக்க கிம் ஜோங் உன்னால் நடத்தப்பட்டன” என்று கூறினார்.

சிரிய உள்நாட்டுப் போரில் ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதற்கு வடகொரியாவின் கிம் ஜோங் உன்,  பஷார் அல் ஆசாத்துக்கு உதவியதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டியது இந்த நிலையில் பஷார் அல் ஆசாத் கிம்மை சந்திக்க இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வருகின்ற 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

5 mins ago

சினிமா

29 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்