இந்தியா - தெ.ஆப்பிரிக்காவின் தலைமைக்கு உலகம் காத்திருப்பு: வெளியுறவு அமைச்சர் சுஷ்மா பேச்சு

By செய்திப்பிரிவு

இந்தியா, தென்னாப்பிரிக்கா வின் தலைமையை எதிர்பார்த்து உலகம் காத்திருக்கிறது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 1893 ஜூன் 7-ம் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இருந்து பிரிடோரியாவுக்கு ரயிலில் முதல் வகுப்பில் காந்தியடிகள் பயணம் செய்தார்.

கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த பெட்டியில் இருந்து கீழே இறங்கி 3-ம் வகுப்பில் பயணிக்குமாறு அவரை சிலர் மிரட்டினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டார். இந்த சம்பவத்தின் 125-வது நினைவு தினம் பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்று பேசியதாவது: மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகிய இரு பெரும் தலைவர்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்த மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர். வெள்ளை யின ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு தென்னாப்பிரிக்காவுடன் முதல் வர்த்தக உறவை ஏற்படுத்தியது இந்தியாதான். அப்போது முதல் இருநாடுகளுக்கும் இடையே நட்புறவு நீடிக்கிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா வின் தலைமையை எதிர்பார்த்து உலகம் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

55 mins ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்