நாகசாகி 69-வது ஆண்டு நினைவு தினம்

By செய்திப்பிரிவு

ஜப்பானின் நாகசாகி நகர் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 69-வது ஆண்டு நினைவுதினம் சனிக் கிழமை அனுசரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது 1945 ஆகஸ்ட் 6-ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்க ராணுவம் அணுகுண்டை வீசியது. இதில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் பலியாகினர். அடுத்த 3 நாள்களில் ஆகஸ்ட் 9-ம் தேதி நாகசாகி நகர் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. இதில் 75 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதல்களின் 69-வது ஆண்டு தினம் இப்போது அனுசரிக் கப்படுகிறது. கடந்த புதன்கிழமை ஹிரோஷிமா நகரில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சனிக் கிழமை நாகசாகி நகரில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள அமைதிச் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் கரோலின் கென்னடி, நகர மேயர் டோமிஹிசா டா உள்பட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்க விடப்பட்டன.

பிரதமருக்கு மேயர் எச்சரிக்கை

நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஜப்பானிய ராணுவத்தை போருக்கு அனுப்ப அந்த நாட்டு அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதற்கு ஜப்பானின் பெரும்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாகசாகி நினைவுதினத்தின் போது அந்த நகர மேயர் டோமி ஹிசா டா இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டிப் பேசினார்.

“போரினால் ஜப்பான் அதிக மாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை நன்றாக உணர்ந்திருந்தும் ராணுவத்தை போருக்கு அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவை ஜப்பானிய மக்கள் விரும்பவில்லை. இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லை யெனில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும்” என்று அவர் எச்சரித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்