சவூதிஅரேபியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்

By செய்திப்பிரிவு

 சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஓட்டுநர் உரிமத்தை  இந்திய பெண் ஒருவர்  முதல்முறையாக பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த சரம்மா தாமஸ் என்கிற சோமி ஜிஜி என்ற பெண்தான் அந்த உரிமத்தைப் பெற்றுள்ளார்.

சவுதி அரேபியாவில் பல 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடை, விலக்கப்பட்டது. பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை ரத்து செய்து, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார்.

இந்தத் தடையை அதிகாரபூர்வமாக விலக்கிக் கடந்த 4-ம் தேதி பெண்களுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கத் தொடங்கியது. அதன்படி, கடந்த 24-ம் தேதி முதல் சவுதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சவூதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமத்தை இந்தியப் பெண் ஒருவர் முதல்முறையாகப் பெற்றுள்ளார் என்று கேரளாவின் முன்னணி மலையாள நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கேரள மாநிலத்தின் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சரம்மா தாமஸ் என்கிற சோமி ஜிஜி என்ற பெண் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் மாத்யு பி தாமஸ். இவர்களுக்கு எய்டன் தாமஸ் என்ற மகன் உள்ளார்.

சவுதி அரேபியா அரசின் கிழக்குப்பிராந்தியத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில், செவிலியராக சரம்மா தாமஸ் பணியாற்றி வருகிறார். இவருக்கு இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் இருக்கிறது, சவுதிஅரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு முறையாகப் பயிற்சி எடுத்து சரம்மா தாமஸ் உரிமம் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

சினிமா

3 hours ago

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

மேலும்