கடமையாற்றவிடாமல் போலீஸை தடுத்ததாக‌ சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் நாட்டில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரத்தின்போது தன் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக சிங்கப்பூரில் இந்தியர் ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் வெடித்தபோது, அங்கு பணியில் இருந்த முகமது பொஹாரி முகமது யூசஃப் என்ற காவலரை உதைத்தார் என்று சிங்கப்பூர் இந்தியரான போஸ் பிரபாகர் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றத்திற்காக கடந்த டிசம்பர் 8ம் தேதி கைது செய்யப் பட்ட போஸ் பிரபாகருக்கு ஓராண் டுச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

கலவரத்தின் போது போலீஸை பணியாற்றவிடாமல் இடையூறு செய்த வழக்கு தொடர்பாக தண்டனை பெறும் இரண்டாவது நபர் இவர் ஆவார். நீதிமன்றத்தில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் கலவரத்தில் தனக்குப் பங்கிருப்பதை போஸ் பிரபாகர் மறுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 25 இந்தியர்களில் போஸ் பிரபாகர் 16வது நபராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கலவரத்தில் பங்கேற்றது தொடர்பாக இதுவரை 6 பேரை குற்றவாளிகள் என்று அறி வித்துள்ளது நீதிமன்றம். போஸ் உள்ளிட்ட 10 பேர் கலவரத் தின்போது போலீஸுக்கு இடை யூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றம் கூறியுள்ளது. மீதமிருக்கும் 9 பேரின் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

இந்தக் கலவரம் தொடர்பாக 52 இந்தியர்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்