உலக மசாலா: காலத்தை வென்ற இளமை

By செய்திப்பிரிவு

ப்பானைச் சேர்ந்த ரைஸா ஹிராகோ புகழ்பெற்ற ஃபேஷன் மாடல். 47 வயதாகும் இவர், 20 வயதுபோல் தோற்றம் அளிக்கிறார். தன்னுடைய இளமையான தோற்றத்தால் நீண்ட காலம் நிலையான புகழுடன் வெற்றிகரமான மாடலாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் படங்கள் போட ஆரம்பித்த பிறகு மேற்கத்திய நாடுகளில் ஏராளமான ரசிகர்களைப் பெற்று வருகிறார். இவரது படங்களைப் பார்த்து, ரசிகர்களாக மாறியவர்கள், இவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காகத் தகவல்களைத் தேடியபோதுதான், 47 வயது என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச ஊடகங்களில் ரைஸாவைப் பற்றிய செய்திகள் வெளிவந்தன. இன்ஸ்டாகிராமில் அதுவரை 90 ஆயிரம் பேர் இவரைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தனர். அதற்குப் பிறகு 2 லட்சம் பேராக எண்ணிக்கை உயர்ந்தது. இன்று 2,22,000 பேர் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ”தோல் சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் என் இளமைக்கு காரணமா என்று எல்லோரும் கேட்கின்றனர். இவை எல்லாவற்றையும் விட என்னுடைய மரபணுதான் இளமைக்கு காரணமாக இருக்க முடியும்” என்கிறார் ரைஸா ஹிராகோ.

காலத்தை வென்ற இளமை!

யா

ராவது கிச்சு கிச்சு மூட்டினாலோ உள்ளங்கால்களைத் தொட்டாலோ கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வருவது இயற்கை. கலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஒரு பெண்ணுக்கு, அடுத்தவர்களுக்குக் கிச்சு கிச்சு மூட்டுவதைப் பார்த்தாலோ உள்ளங்கால்களைக் கூசச் செய்தாலோ இவருக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடிவதில்லை! இந்தப் பெண்ணை வைத்து மருத்துவர்கள் ஆராய்ச்சியை நடத்தி, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். “யாரோ ஒருவரின் உடலைக் கூசினால் கூட இந்தப் பெண்ணின் உடலைக் கூசியதுபோல் உணர்வு ஏற்பட்டு விடுகிறது. இந்தக் குறைபாட்டுக்கு mirror-touch synaesthesia என்று பெயர். இது மிரர் நியூரான்களில் ஏற்படும் குறைபாடு. இதன்மூலம் பிறருக்கு ஏற்படும் நிகழ்வை நமக்கே ஏற்படுவதுபோல் மூளை உணர்ந்துகொள்கிறது. வித்தியாசமான பகுதி யில் தொடுதல், பனிக்கட்டி நீரை ஊற்றுதல், நகைச்சுவை வீடியோவைப் பார்த்தல் என்று பல்வேறு விதங்களில் இந்தப் பெண்ணைப் பரிசோதித்தோம். நாங்கள் பிறருக்குத்தான் இதைச் செய்தோம், ஆனால் அவரைவிட இந்தப் பெண்தான் அதிகமான பாதிப்புக்கு உள்ளானார். இவருக்கு ஏற்படும் இந்தக் கூச்சமும் சிரிப்பும் இயல்பாகவே ஏற்படுகிறது என்பதையும் அறிந்தோம். சில நேரங்களில் அவரால் தாங்க முடியாத அளவுக்குச் சிரிப்பு ஏற்பட்டு, அறையை விட்டு வெளியே சென்ற சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. வெல்வெட் துணியைத் தொடுவது, பல் துலக்கியால் கையில் தேய்ப்பது, பட்டுத் துணியைச் தொடுவது, வழவழப்பான மேஜையைத் தொடுவது, மாங்காய் சாப்பிடுவது போன்ற செயல்களைப் பிறர் செய்தாலும் இவர் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார். மிரர் நியூரான்கள் எல்லோருக்குமே இருக்கின்றன. பொதுவாக அவரவருக்கு ஏற்படும்போது சிரிப்பு வரும், இவர்களுக்கு அடுத்தவர்களுக்கு ஏற்படும்போது சிரிப்பு வருகிறது. உலக மக்கள் தொலையில் இதுவரை 1.6% முதல் 2.5% வரையான மக்கள் இந்த மிரர் நியூரான்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். ஆனால் எல்லோருக்கும் இந்தப் பெண் அளவுக்குத் தீவிரமான பாதிப்பு இல்லை என்பது ஆறுதல்” என்கிறார்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

புதுசு புதுசா நோய் வந்துகொண்டே இருக்கு!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்