இஸ்ரேல் தாக்குதலில் காஸாவின் 2-வது மிகப் பெரிய குடியிருப்பு கட்டிடம் தகர்ப்பு: 25 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

காஸாவின் மேற்கு பகுதியில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் 14 அடுக்குமாடி கட்டிடம் தகர்க்கப்பட்டது.

எகிப்தில் நடந்து வந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இஸ்ரேல்-காஸா முனை இடையே மீண்டும் போர் தீவிரமடந்து வருகிறது. காஸாவில் 14 அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு ஒன்றை இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுவீச்சு நடத்தி தகர்த்தனர். இதில் குடியிருப்பில் இருந்த 25-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பகுதிகளில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருந்து கட்டளைகளை அளித்து வந்தனர்.

நஸ்ஸீர் தெரிவில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு இத்தாலிய காம்பவுண்ட் என்று அழைக்கப்பட்டது. இந்த கட்டிடம் 1995- ஆம் ஆண்டு இத்தாலிய நிறுவனத்தால் கட்டப்பட்டது. போர் சூழல் காரணமாக இந்த பகுதிலிருந்து மக்கள் வெளியேறிய பின்னர், அங்கு மருத்துவ அதிகாரிகளும் பத்திரிகையார்கள் மட்டுமே தங்கி வந்தனர். தொடர் வான்வழித் தாக்குதலில் சுற்று வட்டாரத்தில் இருந்த கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாகின.

கட்டிடத்திலிருந்து வெளியேறும்படி, தாக்குதலுக்கு நடப்பதற்கு முன்னர், ராணுவ தளத்திலிருந்து டெலிபோன் அழைப்பு ஒன்று வந்ததாகவும், அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் வெளியேறியதாகவும் குடியிறுப்பை சேர்ந்த ஒருவர் கூறினார்.

முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன மக்கள் கிளர்ச்சியாளர்கள் இயங்கும் பகுதிகளில் உள்ள வீடுகளை விட்டு வெளியேற வேண்டும், விரைவில் அங்கு தாக்குதல்கள் நடத்தபட்டும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்