உன்னாவ், கதுவா பலாத்காரங்களில் நடவடிக்கை எடுப்பதுதான் அவசியம்: ஐ.நா. பெண்கள் அமைப்பின் தலைவர் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் உன்னாவ் மற்றும் கதுவா பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் தொடர்பாக கண்டனங்கள் தெரிவிப்பதைக் காட்டிலும் நடவடிக்கை எடுப்பதே அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பெண்கள் அமைப்பின் இயக்குநர் பும்சைல் லாம்போ வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் அண்மையில் கூட்டு பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதேபோல், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களையும் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குநரான பும்சைல் லாம்போ, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று அவர் கூறியதாவது:

இந்தியாவின் கதுவா மற்றும் உன்னாவ் பகுதிகளில் நடைபெற்றுள்ள பலாத்காரச் சம்பவங்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இச்சம்பவங்கள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஐ.நா. சபைக்கான இந்திய ஒருங்கிணைப்பாளரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டனங்கள் முக்கியமானதுதான். அதேவேளையில், அந்த விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுப்பது அதைவிட முக்கியமானதாகும். கொலையையும், பலாத்காரத்தையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

ஜோதிடம்

19 mins ago

ஜோதிடம்

34 mins ago

ஜோதிடம்

47 mins ago

வாழ்வியல்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்