உலக மசாலா: கைகளால் நடக்கும் அதிசய மனிதர்!

By செய்திப்பிரிவு

த்தியோப்பியாவின் டிக்ரே நகரில் வசிக்கும் 32 வயது டிரார் அபோஹோய் பெரும்பான்மையான நேரம் கைகளால் நடக் கிறார். தார்ச் சாலை, மலைப் பதை, மாடிப் படிகள் என்று எந்த இடமாக இருந்தாலும் வெறும் கைகளால் நடந்து, காண்போரை ஆச்சரியப்படுத்துகிறார். சின்ன வயதில் சீன, அமெரிக்கத் திரைப்படங்களில் தலைகீழாக நடப்பவர்களைக் கண்டு வியந்திருக்கிறார். 9 வயதில் தானும் அதுபோல் நடக்க வேண்டும் என்று முடிவெடுத்து, கைகளால் நடக்கப் பயிற்சி எடுத்திருக்கிறார். ”திரைப்படங்களில் தலைகீழாக நடக்கும் காட்சிகளில் தொழில்நுட்பமும் எடிட்டிங்கும் பங்குவகித்திருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியாது. அது உண்மை என்று நினைத்துதான் பயிற்சியில் இறங்கினேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. தோள்பட்டையும் கைகளும் பயங்கரமாக வலித்தன. வெறும் கைகளால் நடப்பதால் புண்ணாகிவிட்டன. வீட்டில் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். நான் என்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்தேன். வீட்டில் நடக்க ஆரம்பித்து, பிறகு சாலைகளில் நடக்க ஆரம்பித்தேன். சிலர் என்னைப் பார்த்து வியந்தார்கள். சிலர் சிரித்தார்கள். பிறகு காடு, மலை, மாடிப்படிகள் என்று முன்னேறினேன். இப்போது காலையில் 3 மணி நேரமும் மாலையில் 3 மணி நேரமும் பயிற்சி செய்கிறேன். கால்களால் நடந்து செய்யும் பல விஷயங்களை நான் கைகளால் நடந்துகொண்டு செய்கிறேன். இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி, கைகளால் நடந்தபடி காரை இழுத்துச் செல்கிறேன். என் முதுகில் ஒருவரை உட்கார வைத்து, கைகளால் நடந்து செல்கிறேன். மூட்டையைச் சுமந்து செல்கிறேன். வாய்க்காலைத் தாண்டுகிறேன். கைகளால் நடக்கும் கலையில் மாஸ்டர் பட்டம் பெற்றுவிட்டேன். விரைவில் கின்னஸ் சாதனை படைப்பேன். எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள். ஆனால் என் அம்மா ஒரு நாளும் என்னைப் பாராட்டியதில்லை. எனக்கு என்னாகுமோ என்று பயந்துகொண்டே இருக்கிறார்” என்கிறார் டிரார் அபோஹோய்.

கைகளால் நடக்கும் அதிசய மனிதர்!

தா

ய்லாந்தில் கடந்த 3 மாதங்களில் புதிதாக ஒரு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. வரதட்சணை கொடுக்க முடியாத ஏழை மக்களுக்கு, வரதட்சணையை வாடகைக்குக் கொடுக்கிறார்கள் இவர்கள். தாய்லாந்து திருமணத்தில் வரதட்சணை முக்கியப் பங்கு வகிக்கிறது. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள், வருத்தத்தோடு காட்சியளிப்பார்கள். அந்த வேதனையைப் போக்கும் விதத்தில் இந்தத் தொழிலை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். கட்டுக் கட்டாகப் பணம், நகைகள், கார் போன்றவற்றை வாடகைக்கு விடுகிறார்கள். அவரவர் சக்திக்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்தி, சில நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, சிறப்பாகத் திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள். 1 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வைத்திருக்கிறார்கள். “நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டோம். நாங்கள் நினைத்ததுபோல் வரதட்சணை கொடுக்க முடியவில்லை. அப்படி ஒரு நிலை யாருக்கும் வரவேண்டாம் என்பதற்காகவே இந்தத் தொழிலை ஆரம்பித்திருக்கிறோம்” என்கிறார் தவான் சுபனோண்டகோம்.

ஐயோ… வாடகைக்கு வரதட்சணையா!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்