கிம் சகோதரியுடன் கை குலுக்குவதைத் தவிர்த்த அமெரிக்க துணை அதிபர்

By ஏஎஃப்பி

தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்  தொடக்க விழாவில் பங்கேற்றுள்ள அமெரிக்க துணை அதிபர் பென்ஸ், கிம்மிமன் சகோதரியுடன் கைகுலுக்குவதை தவிர்த்துவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க விழாவுடன் தென் கொரியாவின் பியாங்சங் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

குளிர்கால ஒலிம்பிக் திருவிழாவில் 92 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டிகள் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில்  74 வருடங்களுக்கு பின்னர், வடகொரிய அதிபர் கிம்மின் குடும்பத்திலிருந்து அவரது சகோதரி  கிம் யோ ஜாங் தென் கொரியாவுக்கு வருகை தந்திருக்கிறார்.

இதில் நேற்று நடத்த தொடக்க விழாவில் தென்கொரிய அதிபர் மூன், வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு கூடியிருந்த தலைவர்களுடன் கை குலுக்கிய மைக் பென்ஸ், கிம் யோ ஜாங்குடன்  கை குலுக்குவதை தவிர்த்துவிட்டார். மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விருந்தில் வெறும் 5 நிமிடத்திலேயே பென்ஸ் வெளியேறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரிய அதிபரை சந்திக்கும் கிம் யோ ஜாங்

தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஃபுல் ஹவுசில் இன்று (சனிக்கிழமை) அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன், கிம் யோ ஜாங் சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

40 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்