பூமியை கண்காணிக்க செயற்கைக் கோளை ஏவியது சீனா

By செய்திப்பிரிவு

பூமியில் உள்ள மிகச்சிறிய பொருளையும் தெளிவாகக் காட்டும் அதி நவீன புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை சீனா ஏவியுள்ளது.

தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து, ‘தி காபென்-2’ செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது என, சீன அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொழிலக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக் கோள் சீனாவின் அதிநவீன கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இது பூமியிலுள்ள ஒரு மீட்டர் நீளமுள்ள பொருளையும் அதன் இயற்கையான நிறத்துடன், மிகத் தெளிவாகக் காட்டும் தன்மையுடையது என அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா தெரிவித்துள்ளது.

நில அளவை மற்றும் இயற்கை வள கணக்கெடுப்புகள், சுற்றுச் சூழல், பருவகால மாறுபாடுகளைக் கண்காணிப்பது, துல்லிய வேளாண்மை, பேரிடர் நிவாரணம், நகரமைப்புத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு இந்த செயற்கைக் கோள் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

33 mins ago

சினிமா

50 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்