தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க அவசரச் சட்டம்: பாகிஸ்தான் அதிபர் கையெழுத்திட்டார்

By செய்திப்பிரிவு

தீவிரவாத அமைப்புகள், தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக புதிய அவசரச் சட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் கையெழுத்திட்டுள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது தீவிரவாத தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. அதில் திருத்தம் கொண்டு வந்து அவசரச் சட்டம் ஒன்றை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றவுள்ளது. அதற்கான கோப்பில் அதிபர் ஹுசைன் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சி லால் அறிவிக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்பு கள் மீது நடவடிக்கைகளை எடுக்க இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ள தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் அல்-காய்தா, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி), லஷ்கர்-இ-ஜாங்வி, ஜமாதுத்-தவா (ஜேயுடி), பலாஹ்-இ-இன்சானியத் பவுண்டேஷன், லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் உள்ளன.

மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீது, பாகிஸ்தானில் சுதந்திரமாக திரிந்து வருகிறார். அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

இதையடுத்து தீவிரவாதிகள் மீதும், தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்று அமெரிக்காவும், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும் நெருக்கடி கொடுத்தன. மேலும் பாகிஸ்தானுக்கு, தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைக்காக வழங்கப்படும் நிதியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்தது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருக்கிறது என்றும் அமெரிக்க பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் இந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்