”ஏவுகணை சோதனையை கைவிடும்வரை வடகொரியா மீது அதிக நெருக்கடி”

By செய்திப்பிரிவு

அணுஆயுத ஏவுகணை சோதனைகளை கைவிடும்வரை வடகொரியா மீது அதிகம் அழுத்தம் தரப்படும் என்று அமெரிக்காவும், ஜப்பானும் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனைகள் குறித்தும் ஜப்பானும் பிரதமர் அபேவும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் புதன்கிழமை தொலைபேசியுள்ளனர்.

இதுகுறித்து ஜப்பான் அமைச்சகம் வெளியிட்ட தகவலில், "அணுஆயுத சோதனைகளை வடகொரியா முற்றிலும் கைவிடும்வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைக்கான எந்த அர்த்தமும்i இல்லை.. மேலும் அந்நாட்டின் மீது அழுத்தம் அதிகரிக்கும் வகையில் பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து விதிக்கப்படவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்