ரஷ்ய பிரதமர் மெத்வதேவின் ட்விட்டர் பக்கத்தில் அத்துமீறல்

By செய்திப்பிரிவு

ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் 'ஹேக்' செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து புகைப்பட கலைஞராகப் போவதாக கூறப்பட்ட தகவலையும் அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

ஹேக் செய்யப்பட்ட ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட முதல் டிவீட்டில், "நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசின் செயல்கள் வெட்கத்திற்குரியதாக உள்ளது. நான் மிகவும் வருந்துகிறேன்" என்று குறிப்பிட்டப்பட்டிருந்தது.

அதன் மற்றொரு டிவீட்டில் அதிபர் புதினை குறிப்பிட்டு, "நான் இதனை கூறியே ஆக வேண்டும். நீங்கள் தவறானவர்" என்றும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்ய பிரதமரின் ட்விட்டர் வலைதளத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்தப் பதிவுகளை திட்டவட்டமாக ரஷ்ய அரசு மறுத்து, பிரதமரின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பின்னர், ரஷ்ய பிரதமரின் ட்விட்டர் பக்கம் மீட்கப்பட்டு, அதில் இருந்து அத்துமீறல் ட்வீட்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.

மேலும், ரஷ்ய அரசியல் குறித்து மிக தெளிவாக தெரிந்த ஒருவர்தான் இந்த அத்துமீறல் வேலையை செய்திருக்க முடியும் என்பதால், ரஷ்ய நாட்டை சேர்ந்தவராகத்தான் அந்த ஹேக்கர் இருக்க முடியும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்