சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 77.2 கோடியாக உயர்வு

By செய்திப்பிரிவு

சீனாவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 77.2 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சீனா இண்டர்நெட் நெட்வொர்க் தகவல் மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவிலும் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டை ஒப்பிடுகையில், கூடுதலாக 4.07 கோடி பேர் இன்டர்நெட் பயன்பாட்டு வளையத்திற்குள் வந்துள்ளனர்.

இதன் மூலம் 2017ம் ஆண்டு இறுதியில் சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 77.2 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் இது, 55.8 சதவீதம் ஆகும். உலக அளவிலான சராசரியை விடவும் 4.1 சதவீதம் அளவிற்கு சீனாவில் இன்டர்நெட் பயன்பாடு அதிகமாக உள்ளது. அந்நாட்டின் கிராமப்புறங்களில் 20.9 கோடி பேர் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.

75.3 கோடி பேர் மொபைல் போன் மூலமாகவே இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வருவதற்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதும் முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 mins ago

விளையாட்டு

12 mins ago

கல்வி

59 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்