பாகிஸ்தான் சிறைகளில் 457 இந்தியர்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

பாகிஸ்தான் சிறைகளில் 399 மீனவர்கள் உட்பட 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு அளித்த பட்டியலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 2008-ஆம் ஆண்டு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மற்றொரு நாட்டு கைதிகளின் பட்டியலை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் அம்சம்.

இதன் தொடர்ச்சியாக, ஆண்டுதோறும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளுக்கு இடையே இந்தப் பட்டியல் பரிமாறப்பட்டு வருகிறது. அதன்படி, பாகிஸ்தான் அரசு சார்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு இந்தப் பட்டியல் நேற்று அனுப்பப்பட்டது. அதில், அந்நாட்டு சிறைகளில் 399 மீனவர்கள் உட்பட 457 இந்தியர்கள் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 399 மீனவர்களில் 146 பேரைவரும் 8-ஆம் தேதி விடுதலை செய்யவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நசீர் கானும் தாய்லாந்தில் கடந்த 26-ம் தேதி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

க்ரைம்

3 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்