ஏமன்: ஏடனில் பல பகுதிகளை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

By செய்திப்பிரிவு

ஏடன் நகரின் பெரும்பாலான பகுதிகளை ஏமன் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ஏமனின் துறைமுக நகரமான ஏடனின் பல பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. ஏடனிலிருந்த ஏமன் அரசின் ராணுவ தளத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்" என்று செய்தி வெளியிட்டுள்ளன.

கிளர்ச்சியாளர்கள் தரப்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அரசு தரப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

29 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்