தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம்

By பிடிஐ

நல்ல தீவிரவாதி, கெட்ட தீவிரவாதி என்ற மனநிலையை பாகிஸ்தான் மாற்றிக் கொள்ள வேண்டும். தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில், இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் நாடுகள் கூட்டாக வலியுறுத்தின.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயத் அக்பரூதீன் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், “ எங்கள் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள நாடுதான் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக இருந்து வருகிறது. அங்கிருந்துதான் தீவிரவாதத்தை ஒடுக்கும் சவால்களை எதிர்கொள்கிறோம்.

தீவிரவாதிகளில் நல்லவர், கெட்டவர் என்று பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியாவைப் பொருத்தவரை அண்டை நாடுகளுடனும், உலக நாடுகளுடன் கூட்டுறவுடன் இருந்து, அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளர்ச்சியை கொண்டுவர நினைக்கிறது.

ஆப்கானிஸ்தானில் அமைதி, நிலையான அரசு, வளர்ச்சி கிடைக்கவும் இந்தியா விரும்புகிறது” என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலாளர் ஜான் சல்லிவன் பேசுகையில், “ பாகிஸ்தானுடன் மிகவும் நட்புறவுடன், திறன்மிக்க வகையில், பணியாற்ற அமெரிக்க விரும்புகிறது. ஆனால், தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அந்த நாடு ஆதரவும், புகலிடமும் அளித்து வந்தால், அது சாத்தியப்படாது. அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தொடர்ந்து தங்களின் எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு ஆதரவும், நிதி உதவியும், புகலிடமும் அளித்து வருகிறது என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர் ஹேக்மத் கலில் கர்சாய் குற்றம்சாட்டினார்.

ஆனால், இந்த 3 நாடுகளின் குற்றச்சாட்டையும் பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்தது. அந்த நாட்டின் ஐ.நா.வுக்கான நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி, “எங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என சொல்பவர்கள், தங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவரை வைத்து எங்களை உளவு பார்க்க அனுப்பினர்.அது சந்தேகத்திடமில்லாமல் நிரூபிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

46 mins ago

ஓடிடி களம்

58 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்