சீனாவும், வடகொரியாவும் கையும் களவுமாக பிடிப்பட்டுக் கொண்டன: ட்ரம்ப் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சீனாவும், வடகொரியாவும் கையும் களவுமாக பிடிப்பட்டுக் கொண்டன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து கண்டன குரல்களை எழுப்பி வருகின்றன. மேலும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தல்களை தவிர்க்க சீனா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் தனது ஆசிய சுற்றுப்பயணத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சீனா வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சீனா இதனை மறுத்தது.

ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீனாவும், வடகொரியாவும் கையும், களவுமாக பிடிப்பட்டுக் கொண்டன. வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சீனாவின் நடவடிக்கை ஏமாற்றமளிக்கிறது.

இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் வடகொரியா விவகாரத்தில் நட்பின் அடிப்படையில் முடிவு எட்டப்படாது" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

இணைப்பிதழ்கள்

4 mins ago

தமிழகம்

9 mins ago

இணைப்பிதழ்கள்

30 mins ago

மாவட்டங்கள்

22 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்