சிரியாவில் வான்வழித் தாக்குதல்: 17 குழந்தைகள் உட்பட 25 பேர் பலி

By செய்திப்பிரிவு

சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சிரியாவை உன்னிப்பாக கண்காணித்து வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறும்போது, 'சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் குழந்தைகள் 17 பேர் உட்பட 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அர்பீன், ஹரசதா ஆகிய சிரியாவின் பிற நகரங்களில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொது மக்கள் 8 பேர் பலியாகினர்.

சிரியாவின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகினர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் இதுவரை 3,40,000 பேர் பலியாகியுள்ளனர்’என்று தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்