இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிக்க ட்ரம்ப் முடிவு?- பாலஸ்தீன தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக ட்ரம்ப் அறிவிக்க உள்ளதற்கு பாலஸ்தீன தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபரான பிறகு, ட்ரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்குப் பயணித்தார்.

அப்பயணத்தில் "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நல்ல நட்புறவு நீடிக்கிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி ஏற்பட தற்போது ஏதுவான சூழல் உருவாகியுள்ளது" என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடையே நிலவும் ஜெருசலேம் தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை முயற்சியில் ட்ரம்ப் இறங்கினார்.

இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக, அதிபர் ட்ரம்ப் அடுத்த வாரம் அறிவிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் அரசியல் விளைவை ஏற்படுத்தும் என்று பாலஸ்தீன அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

59 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்