அணு ஆயுத சோதனையை கைவிட முடியாது: வட கொரியா திட்டவட்ட அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஐ.நாவின் கடும் எச்சரிக்கையை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு குண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதையடுத்து, வடகொரியா மீது பல்வேறு சுற்று பொருளாதார தடைகள் ஏற்கெனவே விதிக்கப்பட்டன.

இந்நிலையில் மேலும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கடந்த நவம்பர் 19-ம் தேதி வடகொரியா நடத்தியது. இதையடுத்து, வடகொரியா மீது புதிதாக மேலும் ஒரு பொருளாதார தடை விதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதன்படி, வடகொரியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துக் கொள்ளவதுடன், தங்கள் நாட்டில் உள்ள வடகொரிய தொழிலாளர்களை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் திருப்பியனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:.

‘‘அமெரிக்காவின் முயற்சியில் ஐ.நா விதித்துள்ள பொருளாதார தடை வடகொரியாவின் இறையாண்மை எதிரான நடவடிக்கை. கொரிய தீபகற்ப பகுதியில் போர் சூழலையும் உருவாக்கியுள்ளதுடன் அமைதியையும் சீர்குலைத்துள்ளது. ஐ.நாவின் இந்த தீர்மானத்தை வட கொரியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இதுபோன்ற நடவடிக்கையின் மூலம் அணு ஆயுத சோதனையை, வடகொரியா கைவிட்டு விடும் என அமெரிக்க எண்ணுகிறது. ஆனால் அமெரிக்காவின் கனவு பலிக்காது. பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி அணு ஆயுதங்களை உருவாக்கியுள்ளோம். அதை கைவிட்டு விடும் பேச்சுக்கே இடமில்லை’’ எனக் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்