புதினுக்கு கடும் சவாலாக கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடை

By செய்திப்பிரிவு

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், புதினுக்கு கடும் போட்டியாளராகவும் கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

41 வயதான ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நாவல்னி ஊழல் வழக்கில் தண்டணை பெற்றதால் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் அலெக்ஸி போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு குறித்து அலெக்ஸி கூறும்போது, "புதினுக்கு அவரது தலைமையிலான ஆட்சிக்கு நாட்டில் ஆதரவு அலை இல்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடந்தப்படவுள்ளன. இதில் அரசியல் உள் நோக்கம் உள்ளது. ரஷ்யாவின் உண்மை நிலைமையை நான் வெளிக் கொண்டு வந்ததாலே நான் தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டுள்ளேன். நடைபெறவுள்ள தேர்ந்தலை புறக்கணிக்குமாறு எனது ஆதரவாளர்களை கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாவல்னி தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டப் படியே நடந்ததாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தற்போதைய அதிபராக உள்ள விளாடிமிர் புதின் ஏற்கெனவே 3 முறை அதிபராக பதவி வகித்துள்ளார். மேலும் தொடர்ந்து நான்காவது முறையாக புதின் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

புதினுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸ் நாவல்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான  வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்