மியான்மரில் பத்திரிகையாளருக்கு சிறை: அமெரிக்கா கண்டனம்

By செய்திப்பிரிவு

மியான்மரில், பத்திரிகையாளர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயல் என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் உள்ள ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பு தொழிற்சாலை குறித்த ஆய்வு தகவல்களை வெளியிட்ட, யுனைட்டட் வீக்லி நியூஸ் பத்திரிகையை சேர்ந்த நிறுவனருக்கு தான் மியான்மர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பத்திரிகையாளருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை, மியான்மரில் உள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. சமீபத்தில் மியான்மர், ஊடக சுதந்திரத்தின் எல்லையை தகர்த்து பல நடவடிக்கைகளை மெற்கொண்டுள்ளது. இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பல தரப்பட்ட போராட்டங்களையும் மியான்மார் மேற்கொண்டு வருகிறது.

பத்திரிகையாளருக்கு எதிரான இந்த தீர்ப்பு, மிகவும் கண்டிக்கத்தக்கது. பத்திரிகை சுந்தந்திரத்திற்கு எதிரானது. இந்த தீர்ப்பு, இதுவரை மியான்மர் மேற்கொண்ட நல்ல நடவடிக்கைகளை முறியடித்துவிடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்