ஏமனில் சவுதி தொடுக்கும் அபத்தமான போருக்கு ஒரே நாளில் பொதுமக்கள் 68 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஏமனில் சவுதி தொடுக்கும் அபத்தமான, வீணான போருக்கு ஒரே நாளில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான ஐ.நா. மனிதாபிமானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏமனுக்கான ஐ. நா. மனிதாபிமானி ஜேமி மெக்கோல்டு கூறும்போது, சவுதி தொடுக்கும் அபத்தமான, வீணான போருக்கு ஏமன் தலைநகர் சனாவில் ஒரே நாளில் நடத்தப்பட்ட இரு வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 68 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

சவுதி ஏமன் மீது நடத்தும் போருக்கு அப்பாவி பொதுமக்கள்தான் பலியாகின்றனர்.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து சவுதியின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன.

சவுதி தலையீடு ஏமனில் ஏற்பட்டது முதல், இதுவரை 7,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

47 mins ago

இணைப்பிதழ்கள்

48 mins ago

வணிகம்

33 mins ago

தமிழகம்

53 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்